மத்திய அமைச்சரவை
பிரிக்ஸ் நாடுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு முகமைகளிடையே மனித உபயோகத்திற்கான மருந்து உற்பத்திப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
25 APR 2018 1:14PM by PIB Chennai
பிரிக்ஸ் நாடுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு முகமைகளிடையே மனித உபயோகத்திற்கான மருந்து உற்பத்திப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே கட்டுப்படுத்தும் முறையில் அம்சங்கள் குறித்த நல்ல புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
(Release ID: 1530191)
Visitor Counter : 138