57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் திரைப்படங்களைக் கண்டு ரசிக்க சிறப்பு வசதி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 3:55PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342768Views: 14

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் திரைப்படங்களை ரசிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சினிடப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஐநாக்ஸ் -2 திரையரங்கில் திரையிடப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 திரைப்படங்களுக்கு ஒலிவிளக்கம், எழுத்து வடிவ வசனங்கள் வழங்கப்படுகின்றன.

சினிடப்ஸ் கைப்பேசி செயலி மூலம், பார்வையாளர்கள் தங்களது கைப்பேசியில் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த வசதிகளைப் பெறலாம். ஒலிவிளக்கம் மூலம் திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள், கதாபாத்திரங்களின் செயல்கள், முகபாவனைகள், இடங்கள் போன்றவை குரல் வழியாக விளக்கப்படும்.

திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள், ஒலிகள், பிற முக்கிய ஒலிக் குறிப்புகள் போன்றவை எழுத்து வடிவ வசனங்கள் மூலம் திரையில் எழுத்துகளாகக் காட்டப்படும்.

இதனால், வழக்கமான திரைப்படத் திரையிடலுக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் அனைவரும் ஒரே நேரத்தில் படத்தைப் புரிந்து ரசிக்க முடியும். இந்த வசதி பெறும் 25 திரைப்படங்களில் துரந்தர், தாய் கிழவி உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் பொழுதுபோக்கு என்ற நோக்கத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய திரைப்பட விழாவை உருவாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342544=3&lang=1

****

SS/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342768
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026