இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 2:24PM by PIB Chennai
இந்தியாவை உடற்தகுதி மிக்க, ஆரோக்கியமான நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, 2024 டிசம்பர் மாதம், ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. மிதிவண்டிப் பயணத்தின் மூலம், உடற்தகுதியை ஊக்குப்பதற்கான இந்த இயக்கம், புதுதில்லியில் 500 பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது. 2 ஆண்டுகளில் மக்கள் இயக்கமாக வளர்ந்து, இதன் 99-வது பதிப்பில், நாடு முழுவதும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் முக்கிய சாதனையை எட்டும் வகையில், ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் இயக்கம், தனது 100-வது பதிப்பை கொண்டாட தயாராகி வருகிறது. புனேயில் 2026 நவம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார். இதில், 50 ஆயிரம் சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், மை பாரத் அமைப்புடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் இயக்கத்தின் 100-வது பதிப்பில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உடல் பருமனுக்கு எதிரான முன்னெடுப்பு, போதையில்லா இந்தியா, மாசுபாட்டிற்குத் தீர்வு போன்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிக்க பொதுமக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342481®=3&lang=1
***
SS/LN/SH