கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, ஆஸ்கர் விருதுகளுக்குத் திரைப்படங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறைகள் குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கோவாவில் உள்ள கலை அகாடமியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள், மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
'ஆஸ்கர் விருதுகளைப் புரிந்துகொள்வோம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை, அமெரிக்கத் திரைப்படக் கலை அகாடமியின் நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவர் நடாலி வேட் நடத்தினார்.
திரைப்படங்களை ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து பல இயக்குநர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இல்லை என்று நடாலி வேட் குறிப்பிட்டார். இந்த நடைமுறைகள், விதிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றைத் தொடக்கத்தில் இருந்து இறுதிக்கட்டம் வரை விளக்குவதே பயிற்சி வகுப்பின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் திரைப்படங்களின் சர்வதேச அங்கீகாரத்தை எடுத்துரைத்த அவர், 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' திரைப்படத்தையும் குறிப்பிட்டார்.
பொதுப் பிரிவு, சிறந்த திரைப்படப் பிரிவு ஆகியவற்றுக்கான தகுதிகள் குறித்து அவர் விளக்கினார். அமெரிக்காவின் ஆறு குறிப்பிட்ட பெருநகரப் பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது ஏழு நாட்கள் திரைப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் அவர் எடுத்துரைத்தார்.
நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு, இசை, ஒலி, காட்சி விளைவுகள், திரைக்கதை ஆகிய பிரிவுகளுக்கான தகுதிகளும் விளக்கப்பட்டன.
சர்வதேசத் திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் ஆகிய பிரிவுகளுக்கான சமர்ப்பிப்பு விதிமுறைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்கள் வாயிலாகத் தகுதி பெறும் வழிமுறைகளையும் அவர் விளக்கினார். தொழில்நுட்பத் தேவைகள், சமர்ப்பிப்புக் கட்டணங்கள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342197®=3&lang=1
(Release ID: 2342197)
****
SK/PLM/SH