சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகளின் உயர்தரக் கட்டமைப்பு: ராணுவ விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறங்கின

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 1:20PM by PIB Chennai

குஜராத் மாநிலம் பதான் பகுதியில் உள்ள அமிர்தசரஸ்–ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தில் இந்திய ராணுவத்தின் நான்கு விமானங்கள் நவம்பர் 24, 2026 அன்று வெற்றிகரமாகத் தரையிறங்கின. அவசரகால மற்றும் தந்திரோபாயத் தேவைகளுக்கும் ஏற்றவாறு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதை இச்செயல்விளக்கம் வெளிப்படுத்தியுள்ளது.

ராணுவத் தொலைத்தொடர்புப் பொறியியல் கல்லூரியின் கீழ் செயல்படும் ராணுவ சாகச மையம் ஏற்பாடு செய்த ‘விங்ஸ் ஆஃப் வலர் அண்ட் யூனிட்டி 2026’ பயணத்தின் ஒரு பகுதியாக, காண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘டீம் மவுண்டன் ஈகிள்ஸ்’ குழுவின் 2 நிலையான சிறகு இலகுரக விமானங்கள் மற்றும் 2 இயந்திர கிளைடர்கள் தரையிறங்கின. இதற்காக ராணுவக் குழு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி வாழ்த்துத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சாலைப் பகுதி 170 மில்லியன் தரநிலை அச்சு போக்குவரத்துச் சுமையையும், 550 மி.மீ மேற்பரப்பு அடுக்கு மற்றும் 500 மி.மீ அடித்தள அடுக்கையும் கொண்டதாகத் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341794&reg=3&lang=1&_gl=1

****

SK/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342296) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu , Kannada