கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்ட, நடிகர்கள் தேர்வு இயக்குநர் முகேஷ் சாப்ரா, வளர்ந்து வரும் நடிகர்களுக்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்துள்ள முகேஷ் சாப்ரா, கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான திறமையாளர்களைக் கண்டறிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து உள்ளூர் கலைஞர்களை அடையாளம் காண்பதாகக் கூறினார். தங்கல் திரைப்படத்திற்காக 14,000 சிறுமிகளிடம் தேர்வு நடத்தியதையும், ராமாயணம் திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு 6 ஆண்டுகள் நடைபெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
நடிப்பிற்கு வயது ஒரு தடையல்ல என்றும், திறமை மட்டுமே முக்கியம் என்றும் குறிப்பிட்ட அவர், 40, 50, 60 வயதுடையவர்களும் நடிப்புத் துறைக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். சமூக ஊடகங்களில் உடனடி அங்கீகாரத்தைத் தேடுவதைத் தவிர்த்து, நாடகக் குழுக்களில் இணைந்து நடிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொறுமை, நேர்மை, எளிமையுடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342002®=3&lang=1
****
SK/PD/SH