இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 3:12PM by PIB Chennai
குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிப்பதற்காக 2024 நவம்பர் 27 அன்று தொடங்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள் இல்லாத இந்தியா இயக்கத்தின் 2-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாளை (2026 நவம்பர் 27) புதுதில்லி விஞ்ஞான் பவனில் தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்கள், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள், தேசிய சட்டப் பணிகள் ஆணையம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
ஐநா பொதுச் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினமும் இதே நாளில் (நவம்பர் 27) கடைபிடிக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். இதனையொட்டி நாடு முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341892®=3&lang=1&_gl=1
***
SS/PD/SH