57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஐஎஃப்எஃப்ஐ: 'ஈகோ வி ரீச் ஆல்' திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 7:01PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2341735Views: 6

கானா, பிரான்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான 'ஈகோ வி ரீச் ஆல் (அவர் டைம் வில் கம்)' திரைப்படத்தின் குழுவினர், கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில்  (ஐஎஃப்எஃப்ஐ) செய்தியாளர்களை சந்தித்தனர். சர்வதேசத் திரைப்படப் பிரிவின் கீழ் திரையிடப்பட்ட 104 நிமிட கால அளவு கொண்ட இந்தப் படம், இந்த விழாவில் ஆசிய அளவிலான தனது முதல் திரையிடலைக் கண்டது.

இயக்குநர் அமார்டெய் ஆர்மார், தயாரிப்பாளர் யெமோ ஐக் ஆகியோர், திரைப்படத்தின் பயணம், உள்ளூர் கதைகளை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்புகளின் முக்கியத்துவம் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், இரு நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை எடுத்துரைத்தனர். குறிப்பாக, இந்தியாவின் பாலிவுட் திரைப்படத் துறைக்கு இணையான அமைப்பாக கானாவின் ‘காலிவுட்’  திரைப்படத் துறையைக் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341489&reg=3&lang=1

***

SK/BR/PS

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341735
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026