57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது ஐஎஃப்எஃப்ஐ: மாலைநேர மாயாஜாலம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 6:47PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2341638Views: 5

பகல் வேளையில் திரைப்படக் காட்சிகள், பயிற்சி வகுப்புகள், சிவப்பு கம்பள நிகழ்வுகள், கலந்துரையாடல்களால் நிறைந்திருக்கும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, ரம்மியமான மாலை நேரங்களில் தனக்கே உரிய தனி வசீகரத்துடன் மிளிர்கிறது. மிராமர் கடற்கரை, மார்காவோவில் உள்ள ரவீந்திர பவன், வாகேட்டர் கடற்கரையில் உள்ள ஹெலிபேட் பகுதி ஆகிய இடங்களில் திறந்தவெளித் திரையிடல்கள் மூலம், திரைப்பட அனுபவத்தை பொதுமக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது. மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இந்தத் திரையிடல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதனுடன், ரோம்டமேலின் கலாச்சார நிகழ்ச்சிகள் கோவாவின் வளமான கலைப் பாரம்பரியங்களை முன்னிலைப்படுத்துகின்றன. நவம்பர் 23 முதல் 27 வரை மாலை நேரங்களில் திட்டமிடப்பட்டுள்ள, ஏழு கலாச்சாரக் குழுக்களின் நிகழ்ச்சிகள் இந்த சர்வதேச விழாவிற்கு ஒரு தனித்துவமான உள்ளூர்ச் சுவையைச் சேர்க்கின்றன. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, 'திரைப்படங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடுதல்' என்ற கருப்பொருளில் இன்று, கோவா பொழுதுபோக்குச் சங்க  வளாகத்திலிருந்து பனாஜியில் உள்ள கலா அகாடமி வரை அணிவகுப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் வண்ணமயமான அலங்கார ஊர்திகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341472&reg=3&lang=1

****

SK/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341638
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026