57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், உலக சினிமாவில் கதைக்களங்களை மறுவரையறை செய்வது குறித்துப் பெண் திரைப்படப் படைப்பாளிகள் கலந்துரையாடினர்.
தங்களது சொந்தப் படைப்புப் பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேச்சாளர்கள், வளர்ந்து வரும் திரைப்படப் படைப்பாளிகள் தங்களது உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார பற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஊக்குவித்தனர். ஆழமான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட உள்ளூர் கதைகளால் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் மனதைக் கவர முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340841®=3&lang=1
****
SK/NB/SH