குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குரு தேக் பகதூரின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:42PM by PIB Chennai

குரு தேக் பகதூரின் தியாகத் திருநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

"குரு தேக் பகதூரின் வாழ்க்கை ஆன்மிகப் பற்று, தியாகம், இரக்கம், அசைக்க முடியாத துணிச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அவர் எப்போதும் உண்மை, நீதி, மனிதநேயம் ஆகிய உயரிய கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். மக்களின் மதச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, அவர்களின் உரிமைகளைக் காப்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவர்.

அவரது உன்னதமான தியாகம், மனித மாண்பையும் பிறருடைய உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்தும் அடையாளமாகத் திகழ்கிறது.

குரு தேக் பகதூரின் வாழ்க்கை, அநீதிக்கு எதிராக அச்சமின்றிப் போராடவும், அனைத்து மதங்களையும் மதிக்கவும், சமூகத்தில் அன்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கவும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

மேலும், அவரது உயரிய கொள்கைகளை நமது வாழ்க்கையில் பின்பற்றி, சுதந்திரம், சமத்துவம், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல் ஆகிய அடிப்படைகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340482&reg=3&lang=1

(Release ID : 2340482)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340582) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam