57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: திரைத்துறையில் கோவாவின் எதிர்காலம் குறித்த விவாத நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 5:01PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340556Views: 10

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'சினிமாவில் கோவா' என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாதத்தில், கோவாவின் திரைப்படப் படப்பிடிப்புத் திறன், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அதன் தனித்துவமான இயற்கை, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. திரைப்பட விமர்சகர் சச்சின் சாட்டே நெறியாளராக பங்கேற்ற இந்நிகழ்வில், கொங்கணி திரைப்பட இயக்குநர் ராஜேந்திர தலக், இந்தி திரைப்பட இயக்குநர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா, பிரெஞ்சு நடிகை மரியன்னே போர்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

கோவாவின் தனித்துவமான இயற்கை எழிலும், கலாச்சாரமும், திரைப்படத் துறையினரைத் தொடர்ந்து ஈர்ப்பதாக விஜய் கிருஷ்ண ஆச்சார்யா குறிப்பிட்டார். குறைந்த செலவில் படப்பிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் திரைப்பட நகரத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திரைப்படப் பயிற்சிப் பள்ளிகளையும் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதே சமயம், திரைப்பட நகரம் அமைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய ராஜேந்திர தலக், கோவாவின் இயற்கைச் சூழல், பாரம்பரிய வீடுகளைப் பாதுகாக்கும் வகையில் படப்பிடிப்புகள் அமைய வேண்டும் என்றார். கோவாவின் 10% பகுதிகள் மட்டுமே இதுவரை படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய கதைக்களங்களை இயக்குநர்கள் கண்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவாவின் தனித்துவமான அடையாளத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், பொறுப்புணர்வுடன் படப்பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என நடிகை மரியன்னே போர்கோ வலியுறுத்தினார். சினிமாவில் கோவா மக்களை ஒரே மாதிரியாகச் சித்தரிப்பதைத் தவிர்த்து, பன்முகத்தன்மை கொண்ட கதைக்களங்களை உருவாக்க வேண்டும் என இவ்விவாதத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340397&reg=3&lang=1

****

SK/PD/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340556
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026