57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஹ்மா, தி ஃபார்ம் திரைப்படங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 2:21PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340473Views: 8

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் திரையிடப்பட்ட ரஹ்மா, தி ஃபார்ம் ஆகிய திரைப்படங்களின் குழுவினர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தாய்மை, கருணை, மனிதர்களின் பலவீனங்கள், வாழ்வின் புனிதத்தன்மை குறித்த கதைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இத்திரைப்படங்கள் வேறுபட்ட, ஒன்றோடொன்று தொடர்புடைய தலைப்புகளை ஆராய்கின்றன. பார்வையாளர்கள் தங்களுடைய சுய போராட்டங்களுக்கு அப்பால், மற்றவர்களுடைய வலிகளையும், விருப்பங்களையும் புரிந்துகொள்ள காரணமாகின்றன.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஹ்மா படத்தின் கதாசிரியரும் இயக்குநருமான திரு ஃபைசல் சொய்சல், தி ஃபார்ம் திரைப்படத்தின் கதாசிரியரும் இயக்குநருமான திரு எலிஃபிடா, ஒளிப்பதிவாளர் திரு எம்ரே பெக்காக்கிர் ஆகியோரும் பங்கேற்றனர்.

அவர்கள் தங்களுடைய கதைகளின் பின்னணியாக இருந்த படைப்பு குறித்த பார்வை, தலைப்புக்கேற்ற கதை, படப்பிடிப்பு அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர்.

இதில் ரஹ்மா திரைப்படம், தாய்மை, ஏக்கம், மனித உறவுகள் தொடர்பான ஒரு நெகிழ்ச்சிமிக்க கதை.

இது தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் கதை குறித்து குறிப்பிடுகிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள், தோல்வியில் முடிந்த ஐவிஎஃப் சிகிச்சைகளுக்குப் பின்பும் தாயாக வேண்டும் என்ற அவர்கள் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. நம்பிக்கையிழந்த நிலையில் தனது கணவர் இப்ராஹிமின் தயக்கத்திற்கிடையே ஜார்ஜியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கிறார். இதை தொடர்ந்து நடைபெறுதே முழு திரைப்படமாக நீள்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340295&reg=3&lang=1

***

TV/IR/LDN/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340473
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026