சினிமா என்பது, புவியியல் எல்லைகளையும், கலாசார வேறுபாடுகளையும் கடந்து, உணர்வுகள் என்ற பொதுவான மொழியின் மூலம் மக்களை ஒன்றிணைக்கிறது என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை கார்லா சோஃபியா காஸ்கான் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று (22.11.2026) நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டுமல்ல எனவும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் சக்திவாய்ந்த கலை வடிவம் என்றும் அவர் கூறினார்.
மொழி, நாடு, கலாசாரம் ஆகியவற்றால் மக்கள் வேறுபட்டிருந்தாலும், அன்பு, வலி, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற அடிப்படை உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை சினிமா உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
திரைப்படங்கள் மூலம் வெவ்வேறு சமூகங்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ளவும், அவர்களுடைய அனுபவங்களைப் புரிந்துகொள்ளவும் முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339912®=3
****
SK/PLM/RJ