சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 10:25AM by PIB Chennai
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ஹெச்பிவி (HPV) தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஒன்பது மாதங்களுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் கீழ், 14 வயதுடைய சிறுமிகளுக்கு அரசுப் பொது சுகாதார நிலையங்களில், பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக, பாதுகாப்பான முறையில் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சுமார் 1.2 கோடி சிறுமிகளில் 87 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய ஆறு மாநிலங்கள் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 29.33 லட்சம், பீகாரில் 13.70 லட்சம், குஜராத்தில் 7.75 லட்சம் சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76.12 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.
யு-வின் (U-WIN) இணையதளம் மூலம் தடுப்பூசி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், முன்பதிவு செய்யவும், சான்றிதழ்களைப் பதிவிறக்கவும் முடியும்.
பயிற்சி பெற்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எஞ்சியுள்ள தகுதியான சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தி, கருப்பை வாய் புற்றுநோயை முழுமையாகத் தடுக்கும் இலக்கை அடைய மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339423®=3&lang=1
(Release ID : 2339423)
****
TV/PLM/SH