பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோவில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் – ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு. ஷின்ஜிரோ கொய்சுமி இருதரப்பு பேச்சுவார்த்தை

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 7:06PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு. ஷின்ஜிரோ கொய்சுமியுடன் நவம்பர் 19 அன்று டோக்கியோவில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவின் துப்பாக்கிச் சூடு தளங்களில் ஜப்பான் தற்காப்புப் படைகள் முதன்முறையாக நேரடி ஏவுகணைப் பயிற்சி மேற்கொள்வதற்கான விருப்பக் கடிதம் கையெழுத்தானது வரவேற்கப்பட்டது. மேலும், ‘மலபார் 2026’ மற்றும் ‘ஜைமெக்ஸ்-26’ கடற்படைப் பயிற்சிகள், கப்பல் கட்டுமான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338701&reg=3&lang=1 

***

TV/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339446) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada