ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 3:38PM by PIB Chennai

குடிநீர் வழங்கல் துப்புரவுத்துறை, ஜல் சக்தி அமைச்சகம் சார்பில், ஜல் ஜீவன் இயக்கம் 2.0 திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலான நடைபெற்ற இக்கூட்டத்தில், இமாச்சல பிரதேசம், குஜராத், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 4 மாவட்டங்களின் ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். தேசிய ஜல்ஜீவன் திட்ட இயக்குனர் திரு கமல் கிஷோர் சோன் பங்கேற்று கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். அரசு, கல்வி நிறுவனங்கள் வாயிலாக குடிநீர் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக்கொண்டார். அப்போது, கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் எடுத்துரைத்தனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338449&reg=3&lang=1

 

***

TV/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2339079) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Kannada , English , हिन्दी , Assamese , Bengali-TR , Gujarati