சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 2:58PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், வாகனக் காப்பீடு புதுப்பித்தலுக்கான குறுஞ்செய்தி அனுப்பட்டது. வாகனக் காப்பீடு புத்துப்பித்தல் குறித்து நினைவூட்டும் வகையிலும், இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகவும், இது வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதி என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் அபராதம் விதிப்பது, அபராத ரசீது வழங்குவது போன்ற காரணங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி அமைப்பு, அபராதம் விதிக்கும் நடைமுறையுடன் இணைக்கப்படவில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் வாகன காப்பீடு செலுத்துவதற்கான காலக்கெடு குறித்து அறிந்துகொள்ளவும், உரிய காலத்திற்குள் வாகன காப்பீட்டை புதுப்பிப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் நோக்கிலேயே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் நோக்கிலும், சாலை பாதுகாப்பு சூழலை மேம்படுத்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338406®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH