57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா அந்தோணி சென் இயக்கிய வி ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திரைப்படத்துடன் நிறைவடைகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 3:26PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2338650Views: 8

57-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா சிங்கப்பூரின் பிரபல திரைப்பட இயக்குநர் அந்தோணி சென் இயக்கிய வி ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திரைப்படத்துடன் நிறைவடைகிறது. 2026-ம் ஆண்டு சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட இப்படம் இவ்விழாவின் நிறைவு திரைப்படமாக திரையிடப்படுகிறது. மனித உறவுகள், குடும்ப உறவுகள், சமகால வாழ்க்கையின் சிக்கல்களை உணர்வுப்பூர்வமான திரைப்படைப்பாக இப்படம் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கும்.

சமகால சிங்கப்பூரின் செழுமையான பின்னணியில் உள்ள வி ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திரைப்படம் 21 வயதுடைய ஜூன்யாங்கை மையமாக கொண்டதாகும். அவரது உறவில் ஏற்படும் திடீர் திருப்புமாற்றம் அவரையும், பெண் தோழியையும் அவர்கள் கற்பனை செய்ததை விட  மிக விரைவாக பெரியவர்களுக்கான சுமையை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துவதால் அவரது கவலையற்ற வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஜூன்யாங்கின் கடின உழைப்பாளியான தந்தையின் வாழ்க்கையில் ஒரு துடிப்புமிக்க பெண்ணின் வருகை தந்தைக்கும், மகனுக்கும் இடையே கூறப்படாத சமநிலையை நுட்பமாக மாற்றுகிறது.

கோவாவின் பனாஜியில் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026 நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338445&reg=3&lang=1&_gl=1

***

SS/IR/PS/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2338650
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026