பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படையும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 12:27PM by PIB Chennai

விமானப்படையைச் சேர்ந்த அக்னி வீரர்களுக்கு யோகா குறித்த சரியான கற்றல் முறை, அதற்கான சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இந்திய விமானப்படையும், புதுதில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வு, விமானப்படை தலைமையகத்தில் பணியாளர் விவகாரங்களுக்கான  விமானப்படை அதிகாரி தலைமையில் நடைபெற்றது. இந்திய விமானப்படை சார்பில் உதவி விமானப்படை தளபதியும் (கல்வி), மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் சார்பில் அதன் துணை வேந்தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒத்துழைப்பானது அக்னிவீர் விமானப்படை வீரர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாடு, தகுதிகளை வளர்த்தல், கூடுதல் கல்வி வாய்ப்புகளை அளித்தல் ஆகியவற்றுக்காக இந்திய விமானப்படை மேற்கொண்டு வரும் முயற்சிகளில் மற்றொரு சிறப்புமிக்க அம்சமாகும்.

***

(Release ID: 2338304)

SS/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338626) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu