இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 3:37PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், தேசிய அளவிலான 9-வது இயற்கை மருத்துவ தினம், கர்நாடக மாநிலம், நாகமங்கலாவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், வருமுன் காப்பது, சுகாதாரமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் இயற்கை மருத்துவத்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இயற்கை மருத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போன்றவை இயற்கை மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337874®=3&lang=1&_gl=1
***
SK/LN/RJ