கோவாவில் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள 57-வது இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியாவின் வளர்ந்து வரும் ஓடிடி தளத்தின் ஆக்கப்பூர்வமான, கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து வெப் தொடர்கள் சிறந்த வெப் தொடர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சமூக நடைமுறைகள், கலாச்சார பாரம்பரியங்கள், வரலாற்றுச் சிறப்பம்சங்கள், மனித உறவுகளை மையமாகக் கொண்ட வெப்தொடருக்கான பரிந்துரைகள் இந்தியாவின் வளர்ந்து வரும் ஓடிடி சூழலின் பன்முகத்தன்மை, படைப்பாற்றல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
ஆதர்ஷ் பால் வித்யாலயா, தேவ்கேல், மேட் இன் இந்தியா: ஏ டைட்டன் ஸ்டோரி, மாயாசபா: தி ரைஸ் ஆஃப் தி டைட்டன்ஸ், முசாபிர் கஃபே ஆகிய வெப் தொடர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆதர்ஷ் பால் வித்யாலயா
ஹிமாங்க் கவுர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதர்ஷ் பால் வித்யாலயா தொடர், இந்தியாவின் பொதுக் கல்வித்துறையின் நடைமுறைகளை நகைச்சுவையுடனும் சமூக விமர்சனத்துடனும் வெளிப்படுத்துகிறது. தில்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவை நிறைவேற்ற, தன் பள்ளி மாணவர்கள் தேர்வுகளில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பும் தலைமை ஆசிரியர் ஞானேஷ்வர் திரிபாதியின் பயணத்தைப் பேசுகிறது.
ஆர்வம் இல்லாத மாணவர்கள், கட்டமைப்பு குறைகள், சவாலான கல்விச் சூழல் ஆகியவை இவரது கனவுக்குத் தடையாக இருக்கின்றன. இந்நிலையில், ஒரு சீர்திருத்தவாதியான புதிய ஆசிரியர் ஒருவர் அங்கு வருவதுடன், பள்ளியை மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமடைகின்றன.
கல்வித்துறை எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவையுடன் பிரதிபலிக்கும் இத்தொடர், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் பங்களிப்பையும், அரசு நிறுவனங்களில் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளையும் அழகாக எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337844®=3&lang=1
***
SK/IR/SM/PS