இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 1:22PM by PIB Chennai
துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு சிஓபி 31 கூட்டத்தில் இந்தியாவின் தேசிய அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் சமர்ப்பித்தார். அப்போது உரையாற்றிய அவர், பொதுவான எனினும் மாறுபட்ட பொறுப்புகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப என்ற கொள்கையின் அடிப்படையில் பருவநிலை நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். உரையாடல், ஒருமித்த கருத்து, நடவடிக்கை என்ற சிஓபி 31 கூட்டத்தின் தலைப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர், நேர்மையான உரையாடல், சமத்துவம் அடிப்படையிலான ஒருமித்த கருத்து, உடனடி நடவடிக்கை ஆகியவை உலகளாவிய பருவநிலை சார்ந்த முயற்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்திற்கான வரலாற்றுப் பொறுப்பைச் சுட்டிக்காட்டிய திரு யாதவ், புவி வெப்பமடைதல் என்பது சில நாடுகளில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவு என்றும் இது பசுமைகுடில் வாயுக்களின் தொடர்ச்சியான உமிழ்வால் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார். உயர் இலக்கு என்ற பெயரில் இது போன்ற வரலாற்று உமிழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் சுமையை வளரும் நாடுகள் மீது சுமத்துவது நியாமற்றது என்று கூறினார். வளரும் நாடுகள் பருவநிலை நடவடிக்கையைத் தேந்தெடுப்பதா அல்லது தங்களுடைய கண்ணியமான வாழ்க்தைத்தரம், சுகாதாரம், கல்விக்கான நியாமான உரிமையைப் பெறுவதா என்று நிலைக்கு தள்ளக்கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337813®=3&lang=1
***
SK/IR/SM/PS