கோவாவில் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா 2026-ல், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை சமூகச் சிக்கல்கள், குடும்ப உறவுகள், மனித விழுமியங்கள், தனிப்பட்ட போராட்டங்கள், கலாச்சார மரபுகள் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதைகளை முன்வைக்கின்றன. இந்தத் திரைப்படத் தொகுப்பில், தொழில்நுட்பம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப உறவுகள், தனிமனித அபிலாஷைகள், அரசியல் வாழ்க்கை எனப் பலதரப்பட்ட கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேர்வில் சமகால மற்றும் பாரம்பரிய சமூக அமைப்புகளுக்கு எதிரான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எஸ். கண்ணன் இயக்கிய ஸ்க்ரால், சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய் கிழவி, சத்யசிவா இயக்கத்தில் வெளியான அறிவு, விஜீஷ் மணி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அட்டப்பாடி, ஜோயல் விஜய் இயக்கய கூடு முதலியவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337653®=3&lang=1
***
SK/BR/PS