இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 10:29AM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதாரச் (விபி-ஜி ராம் ஜி) சட்டத்தின் கீழ், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, பொதுமக்கள் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில், குறைதீர்ப்பாளர், மேல்முறையீட்டு ஆணையத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புறத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், திட்டப் பலன்கள் உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த வழிகாட்டுதல்கள் வகை செய்கின்றன.
மாவட்ட அளவில் நியமிக்கப்படும் பிரத்யேகக் குறைதீர்ப்பாளர், வேலை அட்டைகள், வேலைவாய்ப்பு, ஊதியம் வழங்குதல், தாமதத்திற்கான இழப்பீடு, பணியிட வசதிகள், பெண்கள், நலிவடைந்த பிரிவினரின் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பார். இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், நடவடிக்கைகளைக் கண்காணித்தல், புவி இருப்பிடத் தகவலுடன் கூடிய புகைப்படங்களைப் பதிவேற்றுதல் ஆகியவற்றிற்காகப் பிரத்யேக டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், குறைதீர்ப்பாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 3 சமூகத் தணிக்கை பொது விசாரணைகள் அல்லது கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு அவற்றிற்கு தீர்வு காண்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337720®=3&lang=1
***
SK/PD/PS