இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 4:00PM by PIB Chennai
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு, 21-வது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றுக்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்-ஐ சந்தித்தார்.
2025 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் பிரதமர் வோங்கின் இந்திய வருகையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விரிவான உத்திசார் நட்புறவுக்கான வழிவகையின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்தச் சந்திப்பின்போது, பொருளாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, மின்னணுமயமாக்கல், நிலைத்தன்மை, போக்குவரத்து, சுகாதார நலன் மற்றும் மருந்து, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட 8 முன்னுரிமை துறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் பிராந்திய, சர்வதேச அளவில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்க உள்ள சிங்கப்பூருக்கு பிரதமர் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் வெற்றி அடைவதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் வோங்கிற்கு திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.
***
(Release ID: 2337422)
PD/IR/LDN/GS