பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோவில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 11:38AM by PIB Chennai

ஜப்பானில் 2026 நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்தியா–ஜப்பான் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான 4-வது கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார். அத்துடன் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள இரு நாடுகளின் 2 அமைச்சகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் நிலையிலான உரையாடலில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு சிஞ்சிரோ கொய்சுமி, வெளியுறவு அமைச்சர் திரு தோஷிமிட்சு மொட்டேகி ஆகியோருடன் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உத்திசார்ந்த, பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் மறுஆய்வு செய்யப்படும். பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் தடையற்ற, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்துவதில் இரு நாடுகளுக்கிடையேயான அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிபடுத்தப்படும்.

நடப்பாண்டில் 3-வது முறையாக பாதுகாப்பு அமைச்சருக்கும், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337279&reg=3&lang=1

***

PD/IR/LDN/GS   


(வெளியீட்டு அடையாள எண்: 2337352) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Assamese , Bengali , Gujarati , Malayalam