இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 7:34PM by PIB Chennai
இந்திய-தாய்லாந்து கூட்டு வர்த்தகக் குழுவின் 14-வது கூட்டம் இன்று தாய்லாந்தின் நோந்தபுரியில் நடைபெற்றது. இந்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு நிதின் குமார் யாதவ், தாய்லாந்து வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தகப் பேச்சுவார்த்தைத் துறையின் தலைமை இயக்குநர் திருமிகு சோதிமா இம்சவாஸ்திகுல் ஆகியோர் இணைந்து இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர்.
இருதரப்பு வர்த்தகத்தில் காணப்பட்ட ஊக்கமளிக்கும் வளர்ச்சி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 2025–26 நிதியாண்டில் 21.49 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய இந்த வர்த்தகம், முந்தைய ஆண்டை விட 12.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் தாய்லாந்தின் பங்கு 16.7% ஆக இருந்தது.
உள்கட்டமைப்பு, தளவாடங்கள், தானியங்கி, மின்சார வாகனங்கள், உணவு பதப்படுத்துதல், வேளாண் தொழில், மின்னணுவியல், குறைக்கடத்திகள்,, சுற்றுலா, விருந்தோம்பல், நல்வாழ்வு ஆகிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இந்தியா எடுத்துரைத்தது. தாய்லாந்து தனது பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் முதலீட்டு வசதி நடவடிக்கைகளையும் பகிர்ந்துகொண்டது. இந்தியாவின் யுபிஐ-ஐ தாய்லாந்தின் பிராம்ப்ட்பே உடன் இணைப்பது, உள்ளூர் நாணயப் பரிவர்த்தனை, இந்திய ரிசர்வ் வங்கிக்கும் தாய்லாந்து வங்கிக்கும் இடையிலான நிதிநுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பணம் செலுத்துதல், நிதி இணைப்பு குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337121®=3&lang=1
***
SK/BR/GS