57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி திரைக் கலைஞர்களுக்கு சிறப்பு மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:46PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2337195Views: 21

இந்தியாவின் திரைப்படத் துறையின் மையமாக மும்பை விளங்குகிறது. அதே நேரத்தில், தனித்துவமான கதைகள், எதார்த்தமான படைப்புகள், இலக்கியச் செழுமை ஆகியவற்றைக் கொண்ட மராத்தி திரைப்படத் துறையும் அங்கு சிறப்பாக வளர்ந்து வருகிறது.

இந்த மரபைக் கொண்டாடும் வகையில், 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. 2026 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் இவ்விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் ஏழு மராத்தி படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு பழம்பெரும் திரைப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் திரையிடப்பட உள்ளது.

மஹேஷ் லிமாயே இயக்கிய ‘ஆதி அனந்த்’ திரைப்படம், நடிகராக விரும்பும் இளைஞருக்கும் அவரது தாத்தாவுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைச் சித்தரிக்கிறது. விவசாயக் குடும்பத்தின் துயரத்தைப் பேசும் ‘தேவூல் பந்த் 2’, பாலின அடையாளம், குடும்ப உறவுகளை எடுத்துரைக்கும் ‘பாப்யா’, குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட ‘திகீ’ ஆகிய மராத்தி திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

குறும்படப் பிரிவில் ‘பனிஷ்மென்ட்’, ‘ஸ்கை ட்ரீ’, ‘தி மூன்’ ஆகிய மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன. குற்ற உணர்வு, வறட்சி, தோல் நிறமாற்ற நோயால் பாதிக்கப்படும் சிறுவனின் சமூகப் போராட்டம் ஆகியவை இவற்றின் கதைக்கருக்களாகும்.

தீபக் காவடே இயக்கிய ‘து ஆஹேஸ் நா’ திரைப்படம் சிறப்புத் திரையிடல் பிரிவில் இடம்பெறுகிறது. ‘தேவ்கேல்’ என்ற மராத்தி இணையத் தொடர் சிறந்த இணையத் தொடர் விருதுப் பிரிவில் போட்டியிடுகிறது.

பழம்பெரும் நடிகர் சூர்யகாந்த் மந்தாரேவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, 1965-ல் வெளியான ‘சாதி மானசே’ திரைப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் திரையிடப்படுகிறது.

மறைந்த நடிகர் நானா படேகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது ‘தீக்ஷா’ இந்திப் படமும், ‘நட்ஸம்ராட்’ மராத்தி படமும் திரையிடப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337040®=3&lang=1

(Release ID : 2337040)

****

SK/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2337195
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026