57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

வரலாற்றையும் குடும்ப உறவுகளையும் பேசும் ‘ஃபாதர்லேண்ட்’ திரைப்படம் - கோவா திரைப்பட விழாவில் முதலாவதாகத் திரையிடப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 6:46PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2336314Views: 24

கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக, புகழ்பெற்ற போலந்து இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய ‘ஃபாதர்லேண்ட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் படமாக இப்படம் இடம்பெறுகிறது.

1949-ம் ஆண்டு கோடைக்காலத்தில், பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது நடக்கும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர் தாமஸ் மான், அவரது மகள் எரிகா ஆகியோருக்கு இடையிலான உறவை இப்படம் பேசுகிறது. நடிகை, எழுத்தாளர், கார் பந்தய வீராங்கனை எனப் பன்முகத் திறன் கொண்டவர் எரிகா.

அமெரிக்காவில் 16 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த தாமஸ் மான், 1949-ல் மகளுடன் ஜெர்மனிக்குத் திரும்புகிறார். போரால் சிதைந்த நாட்டின் பல பகுதிகளைக் கடந்து அவர்கள் பயணிக்கின்றனர். அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்த பிராங்க்பர்ட் நகரில் தொடங்கி, சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வீமர் நகரம் வரை அவர்களின் பயணம் தொடர்கிறது.

பிளவுபட்ட ஜெர்மனியின் போர் பாதிப்புடன், தங்களது குடும்பத்துக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். குடும்ப உறவுகள், வரலாறு, சொந்த மண் மீதான பற்று ஆகியவை படத்தின் முக்கியக் கருப்பொருள்களாக உள்ளன.

சாண்ட்ரா ஹுல்லர், ஹான்ஸ் ஸிஷ்லர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாகும். கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட இப்படம், இந்தியாவில் முதன்முறையாக இவ்விழாவில் திரையிடப்படவுள்ளது.

2026-ல் கேன்ஸ், சான் செபாஸ்டியன், டெல்லுரைடு ஆகிய சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. கேன்ஸ் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பாவ்லிகோவ்ஸ்கி பெற்றுள்ளார்.

‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்பதே இந்த ஆண்டு திரைப்பட விழாவின் கருப்பொருளாகும். இதற்குப் பொருத்தமாக ‘ஃபாதர்லேண்ட்’ திரைப்படம் முதலில் தொடக்கத் திரைப்படமாகத் திரையிடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336272&reg=3&lang=1

(Release ID : 2336272)

****

AD/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2336314
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026