57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 45 இந்தியப் படங்கள் திரையிடப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 5:24PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2336313Views: 38

இந்தியாவின் 57-வது சர்வதேச திரைப்பட விழாவை (IFFI) முன்னிட்டு, இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழுநீளத் திரைப்படங்கள், 20 முழுநீளமல்லாத திரைப்படங்கள் (ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்டவை) என மொத்தம் 45 படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஆதித்யா தர் இயக்கிய இந்திப் படமான ‘துரந்தர்’ இந்திய பிரிவில் முதலாவது முழுநீளத் திரைப்படமாகவும், லீனா யாதவ் இயக்கிய லடாக்கி மொழிப் படமான ‘பிகம்மிங்’ இந்திய பிரிவில் முதலாவது முழுநீளமற்ற திரைப்படமாகவும் திரையிடப்படவுள்ளன.

25 முழுநீளத் திரைப்படங்கள்:

மொத்தம் 404 படங்கள் பரிசீலிக்கப்பட்டு 25 முழு நீளத் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 20 படங்கள் இந்தியன் பனோரமா பிரிவிலும், ஐந்து படங்கள் முதன்மை வணிகத் திரைப்படப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. தமிழில் கண்ணன் எஸ் இயக்கிய ‘ஸ்க்ரோல்’, சிவகுமார் முருகேசன் இயக்கிய ‘தாய் கிழவி’ ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

வணிகத் திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டி இயக்கிய கன்னடப் படமான ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர் 1’, ஆதித்யா தர் இயக்கிய ‘துரந்தர்’ உள்ளிட்ட ஐந்து படங்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பண்டார்கர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு முழுநீளப் படங்களைத் தேர்வு செய்தது.

20 முழுநீளமற்ற திரைப்படங்கள்:

358 படங்கள் பரிசீலிக்கப்பட்டு 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஹிமான்ஷு சேகர் கட்டுவா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு இவற்றைத் தேர்வு செய்தது. தமிழில் விஜீஷ் மணி இயக்கிய ‘அட்டப்பாடி’ இடம்பெற்றுள்ளது.

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, 1978-ல் தொடங்கப்பட்ட இந்தியன் பனோரமா, இந்தியத் திரைப்படக் கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336235&reg=3&lang=1

(Release ID : 2336235)

****

AD/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2336313
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026