கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) 57-வது பதிப்பில், அலினா ஷெர்பான் எழுதி இயக்கிய ‘ஐ மேட்டர்’ (I Matter) திரைப்படம், சிறப்புத் திரைப்படமாக இந்தியாவில் முதன்முறையாகத் திரையிடப்பட உள்ளது.
ருமேனியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படம், 101 நிமிடங்கள் ஓடக்கூடியது. ரோமானிய, ரோமானி மொழிகளில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அடையாளம், குடும்ப உறவு, சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதல், புதிய வாழ்க்கைக்கான தேடல் ஆகியவை படத்தின் முக்கியக் கருப்பொருள்களாகும்.
அனாதை இல்லத்தில் வளர்ந்த ரெபெக்கா என்ற இளம் ரோமானியப் பெண், அங்கிருந்து வெளியேறத் தயாராகிறாள். சிறையிலிருந்து தந்தை விடுதலையாக உள்ளதால், நீண்டகாலமாக ஏங்கிய குடும்ப வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறாள். நடிப்பு தொடர்பான படிப்புக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதும் அவளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால், கடந்தகால அனுபவங்கள் அவளை மீண்டும் துரத்துவதால் கடினமான முடிவுகளை எதிர்கொள்கிறாள்.
இது அலினா ஷெர்பானின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். இவரது முந்தைய படைப்புகளில் ‘அலோன் அட் மை வெட்டிங்’, ‘ஜிப்ஸி குயின்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ‘ஜிப்ஸி குயின்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
2026 செப்டம்பரில் நடைபெற்ற 83-வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், ஆர்மானி பியூட்டி பார்வையாளர் விருதைப் பெற்றது.
நவம்பர் 24-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவாவின் பனாஜி, போர்வோரிம் நகரங்களில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் படம் திரையிடப்படும். இயக்குநர் அலினா ஷெர்பான், கதாநாயகி டெனிசா ஃபர்காஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் 57-வது ஐஎஃப்எஃப்ஐ திரைப்பட விழாவில், 86 நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336202®=3&lang=1
(Release ID : 2336202)
****
AD/PLM/SH