குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத் பூஜையையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 5:23PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நம்பிக்கையின் திருவிழாவாகவும், சூரிய வழிபாட்டுக்கான புனித விழாவாகவும் கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திருவிழா சூரியன், சத்தி மையா ஆகியோரின் மீதான ஆழ்ந்த பக்தியை எடுத்துக்காட்டுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா, பக்தி, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நமது பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சத் பூஜையின்போது பக்தர்கள் சூரியனுக்கு அர்க்கியம் (புனித நீர் படைத்து வழிபடுதல்) செலுத்தி, தங்கள் குடும்பங்களின் மகிழ்ச்சி, செழிப்பு, நலமான வாழ்வு ஆகியவற்றுக்காக வேண்டிக் கொள்கின்றனர்.

இயற்கைக்கு நன்றி செலுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்தத் திருவிழா நமக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தப் புனிதத் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரட்டும். சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கட்டும்.

இந்த நன்னாளில், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, அவற்றைப் பராமரிப்பதற்கான நமது பொறுப்பை நிறைவேற்ற உறுதியேற்போம்.”

(Release ID : 2336233)

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336300) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam