இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2026 11:05PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்கத் துணை அதிபர் திரு ஜே டி வான்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பிரதமரும், துணை அதிபரும் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். உயர்மட்ட அளவிலான கலந்துரையாடல்களில் நிலவும் தொடர்ச்சியான வேகத்தை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், வர்த்தகம், பாதுகாப்பு, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். துணை அதிபர் திரு வான்ஸ், திருமதி உஷா வான்ஸ் ஆகியோருக்கு மகன் பிறந்ததையொட்டி, பிரதமர், அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், குடும்பத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296717®=3&lang=1
***
TV/RB/SH