இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 5:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியால் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று தொடங்கி வைத்த பாரத் பர்வ கண்காட்சி 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கருப்பொருளின் கீழ் இம்மாதம் 15-ம் தேதி வரை குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெறுகிறது.
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்று வரும் இந்தப் பாரம்பரியக் கைவினைக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றுள்ளன. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், உள்நாட்டு கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலா அமைச்சகம் குஜராத் மாநில சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335115®=3&lang=1
***
SK/SV/GS/RJ