அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியா – இத்தாலி இடையே அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 2:38PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையேயான அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

திரு ஜிதேந்திர சிங் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, அந்நாட்டு விண்வெளி, ஆராய்ச்சி ஒத்துழைப்புத் துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

அவரது இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ரோமில் நடைபெறவுள்ள இந்தியா – இத்தாலி அறிவியல், புத்தாக்க விவாத நிகழ்ச்சியிலும், ட்ரியஸ்டேவிஸில் உள்ள முன்னனி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.

ரோமில் நாளை (12.11.2026) நடைபெறும் இரண்டாவது இந்தியா – இத்தாலி அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க கருத்தரங்கில் இரு நாடுகளைச் சேர்ந்த முன்னனி அறிவியல் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்க உள்ளனர்.

இத்தாலியில் பல்கலைக்கழகம், ஆராய்ச்சித் துறை அமைச்சர் திருமதி அன்னா மரியா பெர்னினி, விண்வெளித் துறை அமைச்சர் திரு அடோல்போ உர்சோ ஆகியோரைச் சந்தித்து பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து திரு ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனையடுத்து நாளை மறுநாள் (13.11.2026) அன்று ட்ரைஸ்டே நகரில் உள்ள அப்துஷ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையம், சர்வதேச மரபணு பொறியியல், உயிரி தொழில்நுட்ப மையம், எலக்ட்ரா சின்க்ரோட்ரான் வசதி மையத்தையும் அமைச்சர் பார்வையிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334953&reg=3&lang=1    

****

SS/SV/GS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335170) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Malayalam