நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ.4 கோடி மதிப்புள்ள 13 ஆயிரம் மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு துறையினர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 3:09PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள சரக்குகளை கையாளும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 13 ஆயிரம் மின்னணு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 13 ஆயிரம் மின்னணு சிகரெட்டுகளின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னணு சிகரெட்டுகளை தயாரிப்பது, ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, விநியோகம் செய்வது, சேமித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2026-2027-ம்  நிதியாண்டில் இதுவரை ரூ.135 கோடி மதிப்பிலான 3.55 லட்சம் மின்னணு சிகரெட்டுகள், வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்கம் ஆகியற்றில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லை தாண்டிய கடத்தலை தடுக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இந்த நவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334613&reg=3&lang=1

***

SS/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334783) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu