இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருளுக்கு எதிரான 100 வார கால இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 12:46PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனது இளைய பாரதம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லா இளையோர் என்ற 100 வார கால உறுதிமொழி இயக்கத்தின் 8-வது வாரத்தில் 2026 நவம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நாடு முழுவதும் போதைப்பொருள் இல்லா இளையோர் தீபத் திருவிழா-உறுதி என்ற ஓர் விளக்கு, போதைப்பொருள் இல்லா இளையோர் குறித்த கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகளை இளையோர் நாடாளுமன்ற இயக்கம் மூலம் ஏற்பாடு செய்தது. தீபாவளி கொண்டாட்டங்களையும், போதைப்பொருளை சார்ந்திருப்பதற்கு எதிரான உரையாடல்களையும் கொண்ட இந்த முன் முயற்சிகள் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 1.19 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களும், மக்களும் கலந்து கொண்டனர். இவற்றில் பங்கேற்றவர்கள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

போதைப்பொருள் இல்லா இளையோர் தீபத் திருவிழா- உறுதி என்ற ஓர் விளக்கு முன்முயற்சியின் கீழ் 435 நிகழ்ச்சிகளும், 568 செயல் நடவடிக்கைகளும் நடைபெற்றன. இதில் 1,10,101 பேர் பங்கேற்றனர். ரங்கோலி கோலம், தீபம் ஏற்றுதல், இனிப்பு வழங்குதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மை பாரத் தன்னார்வலர்களை கௌரவித்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334566&reg=3&lang=1

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334757) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Telugu , Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada