இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2026 8:17PM by PIB Chennai
வளர்ச்சி உதவி:
செஷல்ஸ் அரசிற்கு ஒரு அதிவேக ரோந்துக் கப்பலை அன்பளிப்பாக வழங்குதல்
செஷல்ஸ் பாதுகாப்புப் படையிடம் 10 பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 5 லேசர் ரேடியல் வகை படகுகளை ஒப்படைத்தல்
செஷல்ஸ் அரசிற்கு 6 அவசர ஊர்திகளை வழங்குதல்
செஷல்ஸ் அரசிடம் 500 மெட்ரிக் டன் அரிசியை ஒப்படைத்தல்
செஷல்ஸ் அரசிற்கு 8500 மெட்ரிக் டன் சிமெண்ட்டை வழங்குதல்
அறிவிப்புகள்:
- இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவுகளைக் குறிக்கும் நினைவு இலச்சினை வெளியீடு
- தொழில்முறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையத்திற்கான மெய்நிகர் அடிக்கல் நாட்டு விழா
- செஷல்ஸ் கடலோரக் காவல்படைக்கான பிஎஸ் ஸோரோஸ்டர் கப்பலின் சீரமைப்புப் பணிகள் நிறைவு
- கிளாஸ் காக்பிட் பொருத்தப்பட்ட டார்னியர் விமானம் மேம்படுத்தப்பட்டது
- பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் (CDRI) செஷல்ஸ் இணைகிறது
புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கையெழுத்திடல்/புதுப்பித்தல்:
|
எண்
|
தலைப்பு
|
சுருக்கமான விளக்கம்
|
|
1
|
செஷல்ஸ் குடியரசின் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்கும் (SSIFS) வெளியுறவு மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பரிமாற்றங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நிறுவன ரீதியான ஒத்துழைப்பைச் சாத்தியமாக்குகிறது.
|
|
2
|
இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சர்வதேச பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செஷல்ஸ் சென்ட்ரல் வங்கி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், செஷில்ஸில் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு வழிவகுப்பதுடன், பணப்பரிவர்த்தனைச் சூழலமைப்பில் பரந்த ஒத்துழைப்பிற்கான வழிகளையும் கண்டறியும்.
|
|
3
|
மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ், ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் மற்றும் செஷல்ஸ் குடியரசின் சுகாதார அமைச்சகம் இடையே ஒப்பந்தம்
|
இந்த ஒப்பந்தம், மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலிருந்து செஷல்ஸுக்கு மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழிவகுக்கும்.
|
|
4
|
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்கும் (ஐசிஏஆர்) செஷல்ஸ் மீன்வளம், வேளாண்மை மற்றும் கடல்சார் பொருளாதார அமைச்சகத்தின் வேளாண்மைத் துறைக்கும் இடையேயான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 2026-2031 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டம்.
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செயல் திட்டமும், கூட்டு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு ஆகிய துறைகளில் ஐசிஏஆர்-க்கும் செஷல்ஸ் வேளாண் துறைக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை வளர்ப்பதையும், ஊக்குவிப்பதையும், விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
|
|
5
|
இந்திய அரசிற்கும் செஷல்ஸ் அரசிற்கும் இடையே ஒப்படைப்பு ஒப்பந்தம்
|
இந்த ஒப்பந்தம், நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையில் தப்பியோடியவர்களை ஒப்படைப்பதற்கான சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
|
|
6
|
செஷல்ஸ் நாட்டின் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திற்கும் இடையே, செஷல்ஸ் கொடியிடப்பட்ட கப்பல்களில் பணியாற்றுவதற்காக மாலுமிகளின் பயிற்சி மற்றும் சான்றளிப்பை அங்கீகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், செஷல்ஸ் கொடி ஏற்றப்பட்ட கப்பல்களில் பணியாற்றுவதற்காக இந்திய மாலுமிகளின் பயிற்சி மற்றும் சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
|
|
7
|
செஷல்ஸ் அரசிற்கும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையிலான ஒற்றைக் கடன் வசதி ஒப்பந்தம்
|
2026 பிப்ரவரியில் அதிபர் திரு ஹெர்மினியின் பயணத்தின் போது அறிவிக்கப்பட்ட, செஷல்ஸில் முன்னுரிமை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பின் (SEP) கீழ் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
|
|
8
|
அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதிலும் பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்பது தொடர்பாக இந்திய அரசிற்கும் செஷல்ஸ் அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், செயற்கைக்கோள் பயன்பாடுகள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
|
|
9
|
புதிய செஷல்ஸ் தேசிய மருத்துவமனைக்கான பூர்வாங்கத் தயாரிப்புகள் தொடர்பாக இந்திய அரசிற்கும் செஷல்ஸ் அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய செஷல்ஸ் தேசிய மருத்துவமனையின் மேம்பாட்டிற்கான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது.
|
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278656®=3&lang=1
***
TV/BR/SU