இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:35PM by PIB Chennai
1857-ம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் தியாகிகளை கவுரவிக்கும் நினைவிடத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு அமித் ஷா, இந்த மண்ணில்தான் 1857 மே 10-ம் தேதியன்று, புரட்சி வீரர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்கான முழக்கத்தை எழுப்பினர் என்றும், அங்கிருந்து அந்தப் புரட்சி காட்டுத்தீயைப் போலப் பரவி, ஒட்டுமொத்த உலகையுமே வியப்பில் ஆழ்த்தியது என்றும் குறிப்பிட்டார். 1857 முதல் 1947 வரையிலான 90 ஆண்டுகால போராட்டத்தில், எண்ணற்ற தியாகிகள் தங்களை அர்ப்பணித்தனர் என்றும், அவர்களின் தியாகத்தின் விளைவாகவே, இன்றைய இந்தியாவையும், பாரத மாதாவையும் காணும் பாக்கியம் நமக்குக் கிடைத்ததுஎன்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திருநரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இன்று நாம் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கனவு காண முடிகிறது. அந்த வீரர்களின் தியாகங்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 80 ஆண்டுகளாக ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தியதன் மூலம், இன்று நாம் உலக அரங்கில் மிகுந்த கண்ணியத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறோம், என்றார் அவர்.
வரலாற்றின் ரத்தக் கறை படிந்த பக்கங்களை பொன்னெழுத்துகளால் மாற்றி எழுதாத எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னேற முடியாது என்றும், அம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவிடம், வருங்கால இளைஞர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எல்லையற்ற தேசபக்தி ஊக்கத்தை வழங்கும் ஒரு ஊற்றாகத் திகழும் என்றும் திரு ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333270®=3&lang=1
***
SK/BR/RJ