தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் தூய்மைப்பணி: 1.63 லட்சம் கிலோ பழைய பொருட்கள் அகற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 1:55PM by PIB Chennai

மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6.0 மூலம், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தூய்மைப்பணி, அலுவலக மேலாண்மை, நிலுவையில் உள்ள பணிகளை குறைத்தல் போன்ற அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்மூலம், 1.63 லட்சம் கிலோ எடையுள்ள பழைய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், 40,278 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இயக்கத்தின் கீழ், 1,519 இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்கள் மேலாண்மை மூலம், 39,545 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 8,823 கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. 12,609 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், தேவையற்ற 11,199 கோப்புகள் நீக்கப்பட்டுள்ளன. சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் ஆயத்தப் பணிகளின் போது, மத்திய தகவல்தொடர்பு, ஒலிபரப்புத்துறை, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்விணி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அரசு அலுவலகங்களில் தொடர்ந்து தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333529&reg=3&lang=1 

***

SS/LN/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2333758) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Assamese , Khasi , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam