இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எனது இளைய பாரதம் அமைப்பின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்கள் கலந்துரையாடல் இயக்கம் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 8:45AM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் எனது இளைய பாரதம் (மை பாரத்) அமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்கள் கலந்துரையாடல்: உங்களது வாக்கை அறிந்து கொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நேற்று (2026 நவம்பர் 5) நிறைவடைந்தது. தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொறுப்புள்ள ஜனநாயகப் பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற 536 கலந்துரையாடல் நிகழ்வுகள் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

நாட்டில் உள்ள கல்லூரி வளாகங்கள், கல்வி நிறுவனங்களில் 2026 அக்டோபர் 26 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் 536 இளம் சாதனையாளர்கள் பங்கேற்று, இளம் வாக்காளர்களிடையே ஜனநாயக உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிறைவு நாளில் மட்டும் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட 123 கலந்துரையாடல்களில் 22,588 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில்  அம்மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விளையாட்டுத் துறை சாதனையாளர்கள் கலந்துகொண்டு இளைஞர்களுடன் நேரடியாக உரையாடினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333403&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333643) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Gujarati , Kannada , Malayalam