குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 1:37PM by PIB Chennai
மத்திய சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில், மகளிரால் நடத்தப்படும் சிறு குறு, நடுத்தர நிறுவனங்களில் சுயசார்பு இந்தியா நிதியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு 2026 நவம்பர் 4-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளர் திரு பாரத் கேரா தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர், சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை உயர் அதிகாரிகள், தொழிற்துறை அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளர் திரு பாரத் கேரா, இந்தியா சுயசார்பு நிதி மூலம் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், 824 சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பெண் தொழில்முனைவோர் நிதி ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய பாரத் கேரா, சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332947®=3&lang=1
***
AD/LN/RJ