சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் நான்காவது மாநாடு கோவாவில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 9:01AM by PIB Chennai

மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் சுரங்கத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் நான்காவது மாநாட்டை கோவாவில் 2026 நவம்பர் 5,6 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் சுரங்கத்துறை அமைச்சர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாடு சுரங்கத்துறை தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில சுரங்கத்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் ஒரு முக்கியத் தளமாக அமையும்.

சுரங்கத்துறையில் உள்ள முன்னேற்றம், வாய்ப்புகள், சவால்கள் குறித்து  இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். அத்துடன், மாநிலங்கள் தங்களுடைய அனுபவங்களையும், முன்முயற்சிகளையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் சுரங்கத்துறையின் எதிர்கால வளர்ச்சி, மேம்பாடு குறித்து விவாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நாட்டின் சுரங்கத்துறையை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு பங்களிப்பதற்கும், மாநில அரசுகளுடன் சுரங்க அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஈடுபாட்டை இம்மாநாடு பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2332841)

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333157) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu