புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 8:00PM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு & கண்காட்சி 2026-ன் இரண்டாம் நாளில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடல் அமர்வில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் ஆகியோர் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த எரிசக்தித் திட்டமிடல், உட்கட்டமைப்பு விரிவாக்கம், நிதி திரட்டுதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் தேவ் ஆகியோர் முன்னிலையில், சுமார் ரூ.1.17 லட்சம் கோடி மதிப்பிலான 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்வில் 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 40-க்கும் அதிகமான வெளிநாட்டு அமைச்சர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக இணைந்துள்ளன.
தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்கள், முதலீட்டு வாய்ப்புகளை இந்நிகழ்வில் காட்சிப்படுத்தியுள்ளன. இந்தியாவின் தூய்மை எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும், தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் இந்த மாநாடு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332293®=3&lang=1
***
AD/PD/RJ