சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 2:15PM by PIB Chennai
பொதுச் சட்ட விதிமுறைகள் எண் 953 (இ) மூலம், 1945-ம் ஆண்டின் மருந்து விதிகளின் கீழ், அட்டவணை எம்-ல் திருத்தங்களை மேற்கொள்ள 28 அக்டோபர், 2026 அன்று முன்மொழிவு ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள், கிருமி நீக்கம் செய்யப்பட்ட மருந்துப் பொருட்களுக்கான சிறந்த உற்பத்தி நடைமுறைகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அறிக்கைக்கு ஏற்ப, தூய்மையான பகுதிகளில் நுண்ணுயிரி மாசுபாட்டிற்காக பரிந்துரைக்கப்பட்ட வரப்புகளில் திருத்துங்கள் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த முன்மொழிவு, அட்டவணை எம்-ன் கீழ், பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிரி மாசுபாட்டு வரம்புகளுக்கும், தரம் ஏ பகுதிகளுக்கான உலக சுகாதார அமைப்பின் தேவைகளுக்கும் இடையே தற்போதுள்ள வேறுபாடுகளைக் களைவதற்கு வகை செய்கிறது. இதன் மூலம், இந்தியாவின் ஒழுங்கு விதிமுறைகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப அமைவதற்கு உதவுகிறது.
தரம் ஏ என்பது, மருந்து உற்பத்தியில் கிருமிகள் நீக்கம் செய்வதை உறுதி செய்வதற்கான நிலை ஆகும். இங்கு, வெளியாகும் பொருட்கள், கொள்கலன்கள், கிருமி நீக்கம் செய்யப்பட்டக் கூறுகள் மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332443®=3&lang=1
***
AD/SV/RJ