இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 3:20PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு துறை சார்பில், ‘கேலோ பாரத்: தயாரிப்பு முதல் பதக்க மேடை வரை’ என்ற தலைப்பில், மை பாரத் என்ற இணையதளம் வாயிலாக விநாடி வினா போட்டி நடைபெறுகிறது. 2026 நவம்பர் 4-ம் தேதி தொடங்கும் இப்போட்டி நவம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விளையாட்டு துறையை வலுப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலும், ஆசிய விளையாட்டு, ஆசிய பாரா விளையாட்டு ஆகியவற்றில் இந்தியாவின் சாதனைகளை கொண்டாடும் வகையில், இந்த விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டுச் சூழல் குறித்து மாணவர்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்துகொள்வதே இப்போட்டியின் நோக்கமாகும். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு, ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகளின் சிறந்த பங்களிப்பு தொடர்பான கேள்விகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இந்த விநாடி-வினா போட்டியில் பங்கேற்க வயது வரம்பு, கல்வித்தகுதி கிடையாது. இந்திய குடிமகன்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். கேட்கப்படும் 20 கேள்விகளுக்கு 15 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். வினாடி- வினா தொடர்பான விவரங்களை மை பாரத் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதில் வெற்றிபெறும் முதல் 100 பேருக்கு விளையாட்டு தொடர்பான பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332470®=3&lang=1&_gl=1
***
AD/LN/RJ