புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 4:31PM by PIB Chennai
சூரியசக்தி, வேளாண்-ஒளிமின்னழுத்த தொழில்நுட்பங்கள் மூலம் 30 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கூறியுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்வதேச சூரியசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ச்சியின் பலன்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்வதிலும் இந்தியா கொண்டுள்ள உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், எரிசக்திக்கு அதிகாரமளித்தல், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகக் கட்டமைப்பு ஆகிய கொள்கைகளின் வழிகாட்டுதலுடன், சர்வதேச சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332069®=3&lang=1
****
SK/SV/RJ