இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 2:09PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் உள்ள கிரோரி மால் கல்லூரியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளம் தலைவர்கள் உரையாடல் கூட்டத்தில் உரையாற்றினார். இளைஞர்கள் லட்சிய நோக்குடன் செயல்பட வேண்டுமென்றும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவது தவிர்க்க முடியாததென்றும் இதற்கான நாட்டின் பயணத்தில் தற்போதைய இளைஞர்கள் சிற்பிகளாக இருப்பார்கள் என்று அவர் கூறினார். இந்தியா தமது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது தற்போதுள்ள மாணவர்கள் தங்களின் 40 வயதுகளில் இருப்பார்கள் என்றும் அவர்களுடைய தேர்வுகள், விருப்பங்கள், பங்களிப்புகள் ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறனை எடுத்துரைத்த திரு கோயல் கடந்தாண்டு நாடு இதுவரை இல்லாத அளவில் 863 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறினார். நடப்பாண்டு ஏப்ரல்-மே மாத மதிப்பீடுகளில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் இந்தியா நடப்பாண்டு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டார். இது 16 சதவீத வளர்ச்சியை குறிப்பதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331990®=3&lang=1&_gl=1
***
AD/IR/PS/SH