இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 9:37AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் நினைவு பொருட்கள், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் புனித பொருட்கள், மத்திய கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெம்மா காண்டு ஆகியோர் வரவேற்றனர். புத்தரின் புனித பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. மத்திய கலாச்சாரத்துறை, அருணாச்சலப் பிரதேச அரசு, சர்வதேச பவுத்த கூட்டமைப்பு ஆகியவை இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நவம்பர் 7-ம் தேதி வரை தவாங்கிலும், 8 முதல் 13-ம் தேதி வரை பொம்டிலாவிலும், நம்சாய் பகுதியில் 14 முதல் 20-ம் தேதி வரையும் கண்காட்சி நடைபெறவுள்ளது. புத்தரின் புனித பொருட்கள் நவம்பர் 21-ம் தேதி மீண்டும் புதுதில்லியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சர்வதேச பவுத்த கூட்டமைப்பு சார்பில், ‘’பவுத்தம்: இமயமலை மற்றும் அதற்கு அப்பாலும் பரவுதல்” என்ற தலைப்பில் தவாங்கில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
இந்தியாவில் பவுத்தத்தின் பாரம்பரியத்தை வலுப்படுத்தவும், புத்தரின் போதனைகளை சர்வதே அளவில் கொண்டு செல்வதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். புத்தரின் புனித பொருட்கள், உத்தரபிரதேச மாநிலம், பிப்ரஹ்வா பகுதியில் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331377®=48&lang=1
***
SS/LN/GS